நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு அலுவலகத்தில் பலரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். இதற்கு காரணம் நிர்வாக தலைவர் சொன்ன விஷயமே. ' மேலாளரின் பதவிக்காலம் இன்னும் சில மாதத்தில் முடிகிறது. அவருக்குப் பின் உங்களில் ஒருவரை நியமிக்க உள்ளேன். இனி உங்கள் நடவடிக்கைகளை தீவிரமாக கவனிப்பேன்' என்றார்.
பதவி உயர்வு கிடைத்தால் யார் விடுவார்கள். பம்பரமாக சுழன்று வேலை பார்த்தனர். இந்நிலையில் புதிய மேலாளரைத் தேர்ந்தெடுக்கும் நாள் வந்தது. பணியாளர் முஸ்தபாவை தவிர பலரின் மனதிலும் திக் திக். அவரைத் தன் அறைக்கு அழைத்த தலைவர், 'நீங்கள் தான் அடுத்த மேலாளர்' என ஷாக் கொடுத்தார். இதையறிந்த மற்றவர்கள், ''நாம் கடுமையாகப் பாடுபட்டோம். ஆனால் அவரோ பரபரப்பு இல்லாமல் பணிகளைச் செய்தார்'' என ஆதங்கப்பட்டனர். பதவி ஆசை இல்லாதவரே நிர்வாகத்தை திறம்பட நடத்த முடியும்.