
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து ஞானம் பெற்றவர் அபூ யஸீத் பிஸ்தாமி. தன் வழிகாட்டியான ஜாபர் சாதிக்கை சந்தித்தார். அப்போது, 'ஜன்னல் அருகே இருக்கும் புத்தகத்தை எடுங்கள்' என்றார் ஜாபர்.
'ஜன்னலா? எங்கே இருக்கு' எனக் கேட்டார்.
அதிர்ச்சியுடன், 'ஜன்னல் இருப்பது கூடவா தெரியவில்லை'' என்றார்.
'நான் வந்தது அறிவுரையை கேட்கவே. புத்தகத்தை பார்க்க அல்ல. அதுவும் இப்போது எந்த பொருளும் என் கண்ணில் படவில்லை' என்றார்.
வாயடைத்துப் போன ஜாபர், 'இனி என் அறிவுரை உங்களுக்கு தேவையில்லை. நீங்கள் ஞானியாகி விட்டீர்கள். எல்லோருக்கும் உபதேசம் செய்யுங்கள்' என வாழ்த்தினார்.