
நபிகளில் ஒருவரான நுாஹ்ஹை சந்தித்த போது இப்லீஸ் (ைஷத்தான்), ''நீங்கள் பெரிய உதவியை எனக்கு செய்துள்ளீர்கள். அதற்கு நன்றிக்கடனாக நீங்கள் எது பற்றி கேட்டாலும் உண்மையை கூறுவேன்'' என்றான். அப்போது இறைவனிடம் இருந்து, 'அவன் உண்மையை கூற போகிறான். ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவனிடம் கேளுங்கள்' என கட்டளை (வஹீ) வந்தது.
உடனே ைஷத்தானிடம், உன் நண்பன் யார், நான் உனக்கு என்ன உதவி செய்தேன்'' என இரண்டு கேள்வி கேட்டார் நுாஹ். இதற்கு பதில்களாக கஞ்சன், பொறாமைக்காரன், தற்பெருமை கொள்பவனே என் நண்பன். நானும் என்னைச் சேர்ந்தவர்களும் மக்களை நரகத்திற்கு அனுப்பும் முயற்சிகளில் ஈடுபடுவோம். ஆனால் நீங்களோ உங்கள் கூட்டத்தாரின் மீது சாபமிட்டு நரகவாதிகளாக மாற்றி வேலையை எளிதாக்கி விட்டீர்கள்'' என்றான்.
இதைக் கேட்டதும் அவசரப்பட்டு பலரை சாபமிட்டதை எண்ணி வருந்தினார் நுாஹ்.