sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இஸ்லாம்

/

கதைகள்

/

எல்லா புகழும்...

/

எல்லா புகழும்...

எல்லா புகழும்...

எல்லா புகழும்...


ADDED : மார் 13, 2025 03:04 PM

Google News

ADDED : மார் 13, 2025 03:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹஜ்ஜாஜ் என்னும் கொடியவன் நிர்வாகியாக இருந்தான். இவன் ஒரு மாளிகை கட்டினான். அதைக் கண்டவர்கள், ''இதுபோல மாளிகையை வாழ்நாளில் கண்டதில்லை'' என்றனர். இதைக் கேட்டு மகிழ்ந்தான்.

இதே மாதிரியான புகழ்ச்சியை எதிர்பார்த்து காஜா ஹஜன் என்ற பெரியவரை மாளிகைக்கு வரவழைத்தான். அவரோ ஊருக்கு உபகாரியாக வாழ்பவர். மாளிகை முழுவதும் சுற்றிப் பார்த்த பெரியவர், 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றார்.

''இந்த மளிகையை உருவாக்கியவன் நான். புகழ் எனக்கே'' என்றான் ஹஜ்ஜாஜ்.

''மாளிகை ஒருநாள் தகர்ந்து போகலாம். ஆடம்பர நோக்கில் இதற்கு செய்த செலவை மக்களின் சேவைக்காக பயன்படுத்தி இருக்கலாம். மண்ணறையில் மாளிகை கட்டுவதற்கு பதிலாக மாளிகையில் மண்ணறையை தோண்டிக் கொண்டாய்'' என்றார் பெரியவர்.

கோபப்பட்டவன் வாளை உருவி அவரை வெட்ட முயன்றான்.

''நான் சொன்ன அனைத்தும் உண்மை. ஆனால் இதைப் பார்த்த அனைவரும் உன்னைப் புகழ்ந்ததால் ஆணவத்திற்கு ஆளாகி விட்டாய். என்னைக் கொன்றாலும் பரவாயில்லை. மறுமை நாளில் தண்டனை உனக்கு கிடைக்கும்'' என்றார்.

இதைக் கேட்ட ஹஜ்ஜாஜ் சிந்திக்க ஆரம்பித்தான். பிறகு அவன், ''என்னை நரகத்திற்கு செல்லும் தண்டனையில் இருந்து தப்பிக்க செய்தீர்கள். என் கண்ணை திறந்ததற்கு மிக்க நன்றி'' என்றான்.






      Dinamalar
      Follow us