நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலீமக்துாம் மஹாயிமீ என்னும் ஞானி சிறுவனாக இருந்த காலத்தில் நடந்த சம்பவம் இது.
ஒருநாள் அவரின் தாய், 'குடிக்க தண்ணீர் கொண்டு வா' எனக் கேட்டார். குடத்தில் பார்த்தால் தண்ணீர் இல்லை. பின் கிணற்றுக்கு சென்று தண்ணீர் கொண்டு வருவதற்குள் தாய் துாங்கி விட்டார். ஆனால் சிறுவனோ விடியும் வரை அங்கேயே தண்ணீர் கோப்பையுடன் காத்திருந்தான். பொழுது புலர்ந்தது. கண் விழித்ததும், 'மகனே. எதற்காக இப்படி நிற்கிறாய்' எனக் கேட்டார்.
'அம்மா... தாங்கள் கண் விழித்ததும் தண்ணீர் தருவதற்காக காத்திருக்கிறேன்' என்றார். 'இப்படி ஒரு தங்க மகன் எனக்கு கிடைத்திருக்கிறானே' என மகிழ்ந்தாள் அந்த தாய்