
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதனுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளும், உபயோகிக்கும் பொருள்களும் ஏராளமாகப் பெருகி விட்டன. விதவிதமான ஆடைகள், கண்கவரும் ஆபரணங்கள், கலை நயம்மிக்க அலங்காரப் பொருட்கள், விதவிதமான அலைபேசிகள் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இவற்றை பலரும் தங்களுக்கு தேவையோ, இல்லையோ வாங்கி மகிழ்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் உலக இன்பங்களில் மூழ்கி மறுமை என்ற ஒன்றையே மறந்து விட்டார்கள். எதையும் வாங்கி அனுபவிக்கக்கூடாது என்பதல்ல... தேவைக்கும் அதிகமாக செலவு செய்தால் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. சிக்கனமாக இருந்தால் கடன் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்.