'ஆது' என்னும் சமுதாயத்தினர் பணபலமும், உடல் வலிமையும் கொண்டிருந்ததால் தீய செயல்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆது சமுதாயத்தில் இருந்தே ஹஜ்ரத் ஹூத் என்பவர் நபியாகத் தோன்றினார்.
ஒருநாள் ஹஜ்ரத் ஹூத், ''மக்களே... இறைவன் உங்களுக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அதை நற்செயலுக்கு பயன்படுத்துங்கள். தொழுகையால் அவனுக்கு நன்றி சொல்லுங்கள். வழி தவறினால் ஆபத்தில் சிக்கிக் கொள்வீர்கள்'' என எச்சரித்தார். ஆனாலும் அவர்கள் திருந்தவில்லை.
ஒருகட்டத்தில் ஹஜ்ரத் ஹூத்தையும், அவரது ஆதரவாளர்களையும் கொலை செய்யவும் திட்டமிட்டனர். இதையறிந்த ஆதரவாளர்கள், நபிக்கும், தங்களுக்கும் பாதுகாப்பு தரும்படி துஆ செய்தனர். இதனால் மழை பொய்த்து வறட்சி ஏற்பட்டது.
மீண்டும் ஹஜ்ரத் ஹூத், 'நீங்கள் செய்த பாவத்தால்தான் இப்படி நடந்துள்ளது. உடனே பாவ மன்னிப்பு கோருங்கள். அவன் உங்களை மன்னித்து மழை பொழியச் செய்வான். பஞ்சம் தீரும்' என்றார். ஆனால் அவர்கள் அதை கேட்காமலும், ஆபத்தை உணராமலும் தங்கள் இஷ்டப்படி வாழ்ந்து வந்தனர்.