நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாத்தா வீட்டிற்கு சென்றான் சிறுவன் ஜமால். அப்போது தாத்தா குர்ஆன் படித்துக் கொண்டிருந்தார். அவரிடம், ''நான் ஐந்து வேளை தொழுகிறேன். ஆனால் என் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கவில்லையே'' என வருந்தினான்.
''உன்னைப் போல பலரும் இப்படி சொல்கிறார்கள். உனக்கு என்ன வேண்டும் என்பது இறைவனுக்கு நன்றாக தெரியும்'' என்றார்.
''விளக்கமாக சொல்லுங்க தாத்தா''
''உன் விருப்பத்தை நிறைவேற்றினால் மகிழ்ச்சி அடைவாய். ஆனால் அந்த மகிழ்ச்சி நிலைக்குமா என்பது அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும்''
''சரி தாத்தா... இனி நான் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் எனச் சொல்லுங்கள்''
'எனக்கு என்ன வேண்டும் என்பதை இறைவா... நீ அறிவாய். இம்மைக்கும், மறுமைக்கும் பயன்படும் விதத்தில் என்னை வாழச் செய்வாயாக' என பிரார்த்திக்கச் சொன்னார் தாத்தா.