நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகமும், வானவரான ஜிப்ரீலும் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வானத்தில் இருந்து சப்தம் கேட்டது.''வானில் இதுவரை திறக்கப்படாத கதவு இப்போது திறக்கிறது. அந்த சப்தமே இது'' என்றார் ஜிப்ரீல். அதன் வழியே வானவர் ஒருவர் இறங்குவதைப் பார்த்த ஜிப்ரீல், ''முதன்முறையாக பூமிக்கு வருகிறார் இவர்'' என்றார். வந்த வானவரும் சலாம் கூறி விட்டு, ''எந்த இறைத்துாதருக்கும் தரப்படாத இரண்டு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவையே 'அல்பாத்திஹா', 'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள். இதில் உள்ள பிரார்த்தனைகளை ஓதினால் நன்மை அதிகரிக்கும்'' என்றார்.
இது பற்றி நபிகள் நாயகம் சொல்லும் போது, ''ஒளிச்சுடர்களான அல்பகரா, ஆலுஇம்ரான் அத்தியாயங்களை ஓதினால் வளம் பெருகும். மறுமை நாளில் மேகம் அல்லது பறவை போல வந்து துணைசெய்யும்'' என்றார்.