
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ''தக்வா என்றால் என்ன'' எனக்கேட்டார்.
அதற்கு அவர், ''முட்கள் நிறைந்த காட்டுப்பாதையில சென்றதுண்டா'' என்று கேட்டார்.
''ஆம். சென்றிருக்கிறேன்''
''எப்படி சென்றீர்கள்''
''என் உடம்பிலோ, ஆடைகளிலோ முட்கள் கீறிவிடாதபடி ஆடைகளை சேர்த்துப் பிடித்தபடி சென்றேன்''
''இப்போது நீங்கள் கூறினீர்களே. அதுதான் தக்வா. அதாவது இறையச்சம்'' என்றார்.
மனித வாழ்க்கை ஒரு பயணம். அதற்கு ஒரு பாதை இருக்கிறது. மனிதன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது வழியாகத்தான் சென்றாக வேண்டும். அப்படி செல்லும்போது பயம், கவலை, நோய் போன்ற பாதிப்பு வரக் கூடும். அவற்றில் இருந்து கவனமுடன் காத்துக் கொள்ள வேண்டும். இதற்கு இறையச்சம் துணை செய்யும்.