
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நன்றாக படிக்கும் மாணவன் நசீர். உடல்நலம் சரியில்லாமல் போனதால் படிக்காமல் தேர்வுக்கு சென்றான். அப்போது சட்டை பாக்கெட்டில் எழுதி வைத்திருந்த பேப்பரை பார்த்து தேர்வை எழுதினான். அதைக் கண்டுபிடித்த ஆசிரியர், ''ஏன் இப்படி காப்பியடிக்கிறாய்?'' என கோபித்தார். அதற்கு நசீர், ''படிக்காவிட்டால் என்ன... இப்படி செய்தால் எளிதாக மதிப்பெண் பெறலாம் என நண்பன் யோசனை சொன்னான்'' என அழுதான்.
''நன்றாக படிக்கும் நீ இப்படி செய்யலாமா? ஒழுக்கமே முக்கியம். படிக்காமல் தேர்வுக்கு செல்லும் நிலை வந்தால் உனக்கு என்ன தெரியுமோ... அதை மட்டும் எழுது'' என கண்டித்தார் ஆசிரியர்.

