நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஞானி ஒருவர் கிராமவாசிகள் சிலரை சந்தித்து அறிவுரை கூறினார். அவர்கள் அதை ஏற்காமல் இழிவாக பேசினர். அதையும் பொறுத்துக் கொண்ட ஞானி, 'சென்ற மாதத்தில் ஒரு கிராமத்திற்கு சென்றிருந்தேன். அங்கு உள்ளவர்கள் அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்றனர். என் பசியை போக்க பழங்களை கொடுத்து உபசரித்தனர்.
ஆனால் ஏற்காமல் அவர்களிடமே திரும்ப கொடுத்துவிட்டேன். இப்போதும் அதையே பின்பற்றினேன். இனிக்கும் பழமோ, இழிவான சொல்லோ எதுவாக இருந்தாலும் எனக்கு ஒன்றே. எதையும் அணுகும் விதத்தில் தான் இன்பமோ, துன்பமோ இருக்கிறது' என்றார். அப்போதுதான் அவர்களுக்கு உண்மை புரிந்தது.