நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பணக்காரர் ஒருவரின் மாந்தோப்பிற்கு வேலைக்கு ஆள் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் இப்ராகிம் என்ற ஞானி அவரை பார்க்க வந்தார். அவரது எளிமையான தோற்றத்தை கண்ட பணக்காரர், ''நாளை முதல் வேலைக்கு வரலாமா'' எனக் கேட்டார்.
''சரி. இதுவும் அவனது விருப்பம்'' என நினைத்து வேலைக்கு சேர்ந்தார். ஒருநாள் பணக்காரரை அவரது நண்பர்கள் பார்க்க வந்தனர். அவர்களுக்கு மாம்பழம் தரும்படி இப்ராகிமிடம் சொல்லவே, அவர் பறித்து கொடுத்தார். அவற்றை சாப்பிட்ட நண்பர்கள் புளிப்பு தாங்காமல் முகம் சுளித்தனர்.
''இத்தனை நாளாக வேலை பார்த்தும், எந்த மரத்துப் பழம் இனிக்கும் என தெரியாதா'' என இப்ராகிமிடம் கேட்டார்.
''நீங்கள் எனக்கு மாந்தோப்புக்கு காவல் காக்கும் வேலையைத்தான் கொடுத்தீர்கள். பழங்களை சாப்பிட்டு ருசியை அறிய அனுமதியளிக்கவில்லை'' என்றார். துவல்லவா நேர்மை.