நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகத்தை சந்திக்க மூதாட்டி ஒருவர் வந்தார். அவரிடம் பணிவாக, ''நீங்கள் எப்படி இருக்கிறீர்கள். நாம் சந்தித்து பலநாள் ஆகிவிட்டதே'' என விசாரித்தார். அதற்கு மூதாட்டி, ''நலமாக இருக்கிறேன்'' என்றார்.
சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். உடனே அவரது மனைவி ஆயிஷா, ''மூதாட்டியை இந்த அளவிற்கு உபசரிக்கிறீர்களே... யார் இவர்'' எனக்கேட்டார். ''நாங்கள் கதீஜாவின் (நாயகத்தின் முதல் மனைவி) வீட்டில் இருந்தபோது இந்த மூதாட்டிதான் உதவி செய்வார். அவரை கண்ணியப்படுத்துவது கடமை அல்லவா'' என்றார் நாயகம்.