நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் அழுதபடி ஒரு பெண் நிற்பதைக் கண்டார் நபிகள் நாயகம். ''பொறுத்துக் கொள். நீ எதற்காக அழுகிறாய் என எனக்குத் தெரியாது. இருந்தாலும் உன் கஷ்டம் தீரும்'' என ஆறுதல் கூறினார்.
''என் நிலை தெரிந்தால் இப்படி சொல்ல மாட்டீர்கள். என்னைப் போல கஷ்டப்பட்டவர் யாருமில்லை'' என்றாள். அங்கிருந்து நகர்ந்தார் நாயகம். அதன் பின் தனக்கு அறிவுரை சொல்லியவர் யார் என்பதை அறிந்து அவள் ஓடி வந்தாள்.
''தாங்கள் யார் என தெரியாமல் பேசி விட்டேன். என்னை மன்னியுங்கள்'' என அழுதாள். ''துன்பத்தை பொறு. விரைவில் நல்லது நடக்கும்'' என்றார்.

