நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமிசம் வாங்கி வந்த முல்லா, அதை மனைவியிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார். சமைத்த அவள், கணவருக்காக காத்திருந்தாள். அவர் வருவதாக தெரியவில்லை. முழுவதையும் சாப்பிட்டாள். இதை மறைக்க, பக்கத்துவீட்டு குட்டிப்பூனை அதை சாப்பிட்டதாக பொய் சொன்னாள்.
அவரோ '' குட்டிப்பூனை சாப்பிட்டதா'' என ஆச்சரியமாக கேட்டார்.
''ஆமாம். நான் என்ன பொய்யா சொல்கிறேன்'' என அதட்டலுடன் மனைவி சொல்ல, அந்நேரத்தில் அந்த பூனை வீட்டுக்குள் வந்தது. அதைக் கையில் துாக்கினார் முல்லா. அதன் வயிறு ஒட்டி இருந்தது. 'இந்த குட்டிப்பூனை அவ்வளவு மாமிசத்தையும் சாப்பிட வாய்ப்பே இல்லை'' எனக் கத்தினார்.
திருட்டுப்பூனை போல கணவரிடம் வசமாக சிக்கிக் கொண்டேனே என வருந்தினாள் மனைவி. உண்மையை யாராலும் மறைக்க முடியாது.