தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இஸ்லாம்/கதைகள்/சாமர்த்தியசாலி

சாமர்த்தியசாலி

சாமர்த்தியசாலி


ADDED : அக் 07, 2025 01:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2025 01:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வியாபார விஷயமாக நண்பர்களுடன் வெளியூரில் சந்தைக்கு சென்றார் முல்லா. அங்கே கயிற்றின் மீது கழைக்கூத்தாடி ஒருவன் நடந்து கொண்டிருந்தான். கூட்டத்தில் இருந்த ஒருவர், ''இங்கு யாருக்காவது குந்தீஷ் மொழி தெரியுமா'' எனக் கேட்டார்.

நண்பர்கள் விளையாட்டாக முல்லாவைக் காட்டி, ''இவருக்குத் தெரியும்'' என்றனர். அந்த நபர், ''எங்கே குந்தீஷ் மொழியில் ஏதாவது ஒரு சொல்லைச் சொல்லுங்கள்'' எனக் கேட்டார்.

சிரித்துக் கொண்டே, 'ஆஷ்' என்றால் சூடான சூப்' என்றார் முல்லா. உண்மையில் அவருக்கு இந்த சொல்லைத் தவிர வேறு எதுவும் தெரியாது. ''ஆறின சூப்பை எப்படி சொல்ல வேண்டும்'' எனக் கேட்டார் அந்த நபர். இவருக்கோ அந்த மொழியே தெரியாததால் சமாளிக்கும் விதமாக, ''குந்தீஷ் பேசுவோர் சூடான சூப் மட்டும் குடிப்பர். அதனால் ஆறிய சூப்புக்கு அதில் வார்த்தையே இல்லை'' என நடையைக் கட்டினார் முல்லா. எந்த சூழலையும் சமாளிப்பவனே சாமர்த்தியசாலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us