
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மிருகக்காட்சி சாலைக்கு குடும்பத்துடன் சென்றான் சிறுவன் நிஷார். அங்கே பூனை இருக்கும் பகுதிக்குள் நுழைந்தனர். அங்கு கம்பி வேலிக்குள் குட்டிகளுடன் பூனை விளையாடிக் கொண்டிருந்தது. பூனைகளை கண்டதும் தொட முயற்சி செய்தான் நிஷார். அருகில் இருந்த பணியாளர், ''தம்பி. தொடாதே. பூனை கடிக்கும்'' என எச்சரித்தார்.
பெற்றோர்கள் அடுத்த பகுதிக்குள் நுழைந்தனர். ஆனால் நிஷார் மட்டும் அங்கேயே நின்றான். குட்டி பூனைகளை இழுக்க முயற்சி செய்ய, தாய்ப்பூனை அவன் மீது பாய்ந்தது. அழுதபடி பெற்றோரிடம் ஓடி வந்தான் நிஷார்.
விளையாட்டு வினையாகும் என்பது நிஜம்தானே.

