நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹாரூன் ரஷீத் என்ற மன்னரின் மகன்கள் அமீன், மாமூன். பணிவும், ஒழுக்கமும் கொண்ட அவர்கள் இருவரும் ஆசிரியரிடம் கல்வி கற்றனர்.
ஒருநாள் வகுப்பை முடித்து விட்டு ஆசிரியர் புறப்படத் தயாரானார். அப்போது சிறுவர்களான அவர்கள் ஓடி வந்து, ' நான் தான் ஆசிரியரின் செருப்பை எடுத்துக் கொடுப்பேன்' எனச் சண்டையிட்டனர். இதைக் கண்ட ஆசிரியர்,
''சண்டை இடாதீர்கள். ஆளுக்கு ஒன்றாக எடுத்து வாருங்கள்'' என அமைதிப்படுத்தினார். இதையறிந்த மன்னர் ஹாரூன் மகிழ்ச்சி அடைந்தார். பின்னாளில் இருவரும் இளைஞரான பின்னர் ஒற்றுமையுடன் வாழ்ந்து நல்லாட்சி நடத்தினர்.

