நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவி ஆயிஷாவிடம் பேசிக் கொண்டிருந்தார் நபிகள் நாயகம். அப்போது அலமாரியின் மீதிருந்த திரைச்சீலை காற்றில் பறந்தது. அதற்குள் பொம்மைகள் இருப்பது தெரிந்தது.
''இது என்ன'' எனக் கேட்டார்.
''மண்ணால் ஆன குழந்தை பொம்மைகள்'' என்றார்.
அதற்கு நடுவில் தோலால் செய்யப்பட்ட பறக்கும் குதிரை ஒன்று இருந்தது. அதைக் கண்டதும், ''இது என்ன'' எனக் கேட்டார்.
''குதிரை''
''இதற்கு இறக்கை முளைத்துள்ளதே... எப்படி'' எனக் கேட்டார்.
''சுலைமான் நபியிடம் இருந்த குதிரைக்கு இரண்டு இறக்கை இருந்ததை கேள்விப்பட்டதில்லையா'' எனக் கேட்டார் ஆயிஷா.
உடனே தன் கடைவாய்ப் பல் தெரியும்படி சிரித்து விட்டு, 'ஆமாம்... உண்மை தான்' என தலையசைத்தார்.

