நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாயகத்தை சந்தித்த இளைஞர் ஒருவர், ''பண நெருக்கடியும், மனக் கவலையும் என்னை வாட்டுகிறது. நிம்மதியாக வாழ வழி சொல்லுங்கள்'' எனக் கேட்டார்.
''உங்களுக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன். அத்துடன் நான் சொல்லும் வசனத்தை மானசீகமாக சொல்லி நீங்களும் வேண்டுங்கள்.
'' இறைவா... கவலை, கடனில் இருந்து பாதுகாப்பு கோருகிறேன். அத்துடன் கோழைத்தனம், ஆதரவற்ற நிலை, எதிரி தொல்லையில் இருந்து விடுபட்டு வாழ விரும்புகிறேன்'' என சொல்லி அனுப்பினார்.
ஆறு மாத காலம் கழித்த பின் அந்த இளைஞர், 'பாதி கடனை அடைத்து விட்டேன். இப்போது குடும்பத்திலும் நிம்மதியை உணர்கிறேன்'' என்றார் மகிழ்ச்சியுடன்.

