ADDED : மார் 12, 2026 11:39 AM
அ நிறம் | அளவு
முதல் முறையாக அமீர் சுற்றுலா சென்றான். அங்கு கடலை பார்த்து பிரமித்தான். கடலின் மறுமுனை அடிவானத்துடன் சேர்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டான். இவ்வளவு தண்ணீர் ஒரே இடத்தில் எப்படி சேர்ந்தது? கடல் நீர் ஏன் உப்பாக உள்ளது என கேள்விகள் எழுந்தன. சுற்றுலா முடிந்து வீட்டுக்கு வந்தான். அப்பாவை அணைத்துக் கொண்டான்.
''என்னப்பா... டூர் போனியே.. என்ஜாய் பண்ணியா'' கேட்டார் அப்பா. ''ஜாலியா இருந்துச்சு...'' என்றான். மீண்டும் அவன் 'அப்பா... ஒரு சந்தேகம். கடல் தண்ணீர் உப்பு கரிக்குதே. குடிக்க முடியலையே?'' எனக் கேட்டான்.
'' அதற்கு காரணம் இறைவனே. அறிவியல் ரீதியான காரணத்தை உன் ஆசிரியரிடம் கேள்'' என்றார்.
