ADDED : மார் 12, 2026 11:43 AM

அ நிறம் | அளவு
பயாஸித் என்னும் சூபி ஞானியின் அனுபவம் நமக்கும் தேவை. இளைஞனாக இருந்த போது உலகத்தை திருத்த வேண்டும் என விரும்பினேன். அதற்கான பலத்தை தரும்படி வேண்டினேன். காலம் ஓடியது. நடுத்தர வயதை அடைந்தேன். ஆனால் ஒருவரையும் என்னால் திருத்த முடியவில்லை.
குடும்பத்தினரை திருத்தலாம் என்ற முடிவுக்கு வந்தேன். காலம் கழிந்ததே ஒழிய விருப்பம் நிறைவேறவில்லை. முதுமையை அடைந்தேன். யாரையும் திருத்த முடியாது என்ற உண்மை புரிந்தது. என் வாழ்க்கையை இழந்து விட்டேனே என்ற கவலை ஏற்பட்டது. 'மற்றவரை திருத்த நீ யார்? உன்னை நீயே திருத்திக் கொள்' என்ற முடிவுக்கு வந்தேன்.
கடைசியில் அந்த ஞானி, 'என்னைக் கண்டுகொண்டேன் இறைவா! என்னை நானே திருத்த வழிகாட்டு' என்றார்.
