ADDED : மார் 26, 2026 12:29 PM
அ நிறம் | அளவு
எறும்புகள் மெதுவாக சென்று கொண்டிருந்தன. அப்போது வழியில் யானை ஒன்று குறுக்கிட்டது. உடனே முதல் எறும்பு, ''யார் இவன். நாம் நடக்கும் போது குறுக்கே வருகிறானே... இவனுடைய காலை கடிப்போம்'' என்றது.
தலைவனான எறும்பு, ''நாம் அனைவரும் சேர்ந்து ஒருவனைத் தாக்குவது தர்மம் அல்ல'' என்றது.
இந்த எறும்புகளை போல மனிதர்கள் பலர் அகங்காரத்துடன் செயல்படுகிறார்கள். தங்களின் பலவீனத்தை அறியாமல் பிறரை ஏளனமாக பார்ப்பதே இவர்களின் வேலை. யானை மிதித்தால் நிலைமை என்னாகும் என யோசித்தால் உண்மை புரியும்.
