ADDED : அக் 01, 2026 08:53 AM
நபிகள் நாயகம் தன்னுடைய பொருட்களை மற்றவருக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைவார். யாரும் உதவி கேட்டு வராவிட்டால் கூட தானே தேடிச் செல்வார். அன்றாட தேவையான பார்லி மாவு, பேரீச்சம்பழத்தைக் கூட நாளை வைத்துக் கொள்ளலாம் என யோசிக்க மாட்டார். தன் தேவை போக மீதியை மற்றவருக்கு கொடுப்பார்.
ஒருநாள் தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு தோழர், 'நீங்கள் அணிந்திருக்கும் சால்வை அழகாக உள்ளது' என என்றார். உடனே சால்வையை நீயே வைத்துக் கொள் என போர்த்தி விட்டார்.
அங்கிருந்தவர்கள் சால்வை பெற்றவரிடம், ''இது நாயகத்திற்கு அவசியமானது. அதைப்போய் வாங்கலாமா'' எனக் கோபித்தனர். ''எனக்கும் அது தெரியும். ஆனாலும் ஏன் சால்வையை கேட்டேன் தெரியுமா...
இது அவர் அணிந்த சால்வை என்பதால் மதிப்பு மிக்கது. அதை பொக்கிஷமாக வைத்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.
