ADDED : செப் 24, 2026 12:07 PM
அ நிறம் | அளவு
ஒருமுறை நபிகள் நாயகத்தை சந்திக்க தோழர் உமர் வந்தார். அப்போது அங்கு அவர் பார்த்த விஷயங்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தின.
பேரீச்சை இலைகளால் வேயப்பட்டிருந்த சிறிய குடிசை வீட்டில் இருந்தார். அங்கு ஒரு பாயும், தண்ணீர் குவளை மட்டுமே இருந்தன. கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்ததால் கயிற்றின் தழும்புகள் அவருடைய முதுகில் பதிந்திருந்தது. அதைக் கண்டு வருந்திய உமர், ''மற்றவர்கள் ஆடம்பரமாக இருக்கும் போது, நீங்கள் மட்டும் எளிமையாக இருப்பது ஏன்'' எனக் கேட்டார்.
''இறைவன் எளிமையை விரும்புபவன். எளிமையாக வாழ்ந்தால் மறுமை, பேரின்பம் அடையும் தகுதி கிடைக்கும்.மறுமையில் நான் பேரின்பம் அடைவதை நீங்கள் விரும்பவில்லையா'' எனக் கேட்டார்.
