ADDED : அக் 15, 2026 01:49 PM
தொழுகை என்பது கட்டாயக் கடமை;
அது நம்மை இறைவனுடன் இணைக்கும் பாலம்.
'தொழுகையில் அவசியம் ஈடுபடுங்கள்.வெட்கக்கேடான செயல்கள், தீமைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்' என்கிறது குர்ஆன்.
இந்த வசனம் தொழுகையின் பலனை சொல்கிறது.
குஷூஉ (தாழ்மை): தொழுகையின் முதல் அடிப்படை குஷூஉ. மனதை ஒருமுகப்படுத்தி அவனிடம் சரணடைவதாகும். அதாவது எத்தனை முறை தொழுகை செய்தாலும், மனம் எதையோ சிந்தித்தால் பலன் கிடைக்காது.தபஹ்ஹும் (புரிதல்)தொழுகையில் ஓதும் சூராக்களின் (குர்ஆன் அத்தியாயம்) பொருளைப் புரிந்து கொள்வது முக்கியம். குறிப்பாக முதல் அத்தியாயம் 'அல் பாத்திஹா'வின் மூலம் அவனிடம் மன்றாடுவது சக்தி வாய்ந்தது என்பதை உணர வேண்டும்.
தஸ்பீஹ் (இறைவனை ஞாபகப்படுத்தல்)தொழுகை முடிந்த பிறகும் இறை நினைவு வேண்டும். இப்படி யார் தொழுகை செய்கிறாரோ, அவருக்கு பாவம் சேராது.
