ADDED : நவ 10, 2023 10:24 AM

நபிகள் நாயகம் தன் தோழர்களிடம், ''இரும்பின் மீது தண்ணீர்பட்டால் துருப்பிடித்து விடுகிறது. அதுபோல் கெட்ட சிந்தனையால் இதயமும் துருப்பிடித்து விடுகிறது'' என்றார். உடனே அவர்கள், ''இதயத்தின் மீதுள்ள துருவை நீக்கும் வழி என்ன'' எனக்கேட்டனர்.
''மரணத்தை அதிகமாக நினைவில் நிறுத்துவதும், குர்ஆனை தொடர்ந்து ஓதி வருவதுமே இதயத்துருவைப் போக்கும் வழி'' என சொன்னார்.
ஆடம்பர வாழ்வை மனிதர்கள் விரும்புவதால், தவறுகளை செய்கிறனர். அப்போது அவர்களின் இதயத்தில் மாசுபடிந்த எண்ணங்கள் தோன்றி, கெட்ட ரத்தத்தால் நிரப்பப்படுகிறது. இதை மாற்ற மரணமே சிறந்த வழியாகத் தெரிகிறது. அடுத்த நிமிடம் இருப்போமா, மாட்டோமா என சிந்தித்தால் ஆடம்பரத்தின் பக்கம் மனம் செல்லாது. இதனால் தவறுகள் குறையும். இதன்மூலம் அவனுக்கு பிரியமானவராகவும், அவனது அருளுக்கு பாத்திரமாகும் வாய்ப்பும் கிடைக்கும்.