நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இப்ராஹீம் (அலை) நபிக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஏட்டுச் சுவடியில் கீழ்க்கண்ட வரிகள் காணப்படுகின்றன.
மண்ணகமே. நல்லவர்கள் உனக்கு என்ன தீங்கு செய்தார்கள். அவர்களின் கவனத்தைக் கவர்வதற்காக நீ அலங்கரித்துக் கொள்கிறாய். ஆனால் உன் முயற்சி பலிக்காது. அவர்களின் உள்ளத்தில் உன்மீது வெறுப்பைத் துாவிவிட்டேன். உன்னால் விளையும் விபரீதங்களை உணர்த்திவிட்டேன். எனவே அவர்கள் உன் வலையில் சிக்கமாட்டார்கள்.
எத்தனையோ பொருட்களை நான் படைத்திருக்கிறேன். உன்னைப்
போன்ற கேவலமான படைப்பை படைத்ததில்லை. உன்னை நம்பியவர்கள் எவரும் நிரந்தரமாக வாழ முடியாது. எல்லாவற்றையும் போல நீயும் விரைவிலேயே அழியப்போகிறாய்.