
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறுதித் தீர்ப்பு நாளில் கொண்டு வரப்பட்ட ஒரு மனிதன் நரக நெருப்பில் துாக்கியெறியப்பட்டான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழுந்தது. அதை எடுத்துக்கொண்டு செக்கில் சுற்றும் கழுதையைப் போல் நரகத்தைச் சுற்றினான். இதைப் பார்த்து மற்ற நரகவாசிகள், ''உனக்கு இந்த நிலைமை ஏன் வந்தது? நற்செயல்களில் ஈடுபடும்படி எங்களுக்கு போதனை செய்தீர்களே... தீமைகளை விட்டு எங்களை தடுத்து நிறுத்தினீர்களே... இப்படிச் செய்தும் எப்படி இங்கு வந்தீர்கள் எனக் கேட்டனர். அதற்கு அவன், ''நான் உங்களுக்கு நன்மையைப் போதித்தேன். ஆனால் நானோ அதனருகில்கூட செல்லாமல் வாழ்ந்தேன்.
தீமைகளை விட்டு மற்றவரைத் தடுத்தேன். ஆனால் நானோ பிறருக்கு தீங்கிழைத்தேன்'' என்றான்.