ADDED : மார் 08, 2024 02:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெதீனாவின் தலைவர் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு, மெக்காவில் இருந்த முஸ்லிம்களுக்கு எதிரிகளான குரைஷி இன மக்கள் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர்.
அதில், 'எங்கள் நாட்டைச் சேர்ந்தவருக்கு உமது நாட்டில் புகலிடம் அளித்திருக்கிறீர். அவரைக் கொல்லுங்கள் அல்லது விரட்டுங்கள். மீறினால் உம் நாட்டைக் கைப்பற்றி உம்மைக் கொன்று அங்குள்ள பெண்களைக் கைப்பற்றுவோம்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இச்செய்தியை அறிந்த நபிகள் நாயகம் உடனே அப்துல்லாஹ் இப்னு உபையிடம் சென்று, ''உம்முடைய மக்களோடும், சகோதரர்களோடும் சண்டை செய்வீரா'' எனக் கேட்டார்.
இதற்கு அவர் பதில் கூறவில்லை. காரணம் அவரது நெருங்கிய உறவினர்கள் முஸ்லிம்களாக மாறியிருந்தனர். இதனால் குரைஷி இன மக்களின் கோரிக்கையை அவரால் நிறைவேற்ற இயலவில்லை.