நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகம் மெதீனாவுக்கு சென்ற போது அங்கு அன்சாரிகள், முனாபிக்குள் என்ற பிரிவினர் இருந்தனர்.
அன்சாரிகள்: ஒளஸ், கஸ்ரஜ் என்னும் இரண்டு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் முஸ்லிம்களாகி ஒற்றுமையாக வாழத் தொடங்கினர்.
முனாபிக்குகள்: இவர்கள் இஸ்லாத்தைத் தழுவியவர்களாக நடித்து, உள்ளுர் முஸ்லிம்களுக்கு விரோதிகளாக இருந்தவர்கள். மெதீனாவைச் சேர்ந்த செல்வந்தரான அப்துல்லாஹ் இப்னு உபை என்பவர் இவர்களுக்கு தலைவராக இருந்தார். மெதீனாவில் இவருடைய ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. பின் அவர் அங்கு வந்ததும் நிலைமை மாறியது.
இதனால் கோபப்பட்ட இப்னு உபை தன் வஞ்சகமான எண்ணத்தை மறைத்துக் கொண்டு வெளிப்பார்வைக்கு முஸ்லிமாக மாறிக் கொண்டார். இவர் வாழ்நாள் முழுவதும் முஸ்லிம்களுக்கு தீமைகளைச் செய்தார்.