ADDED : பிப் 23, 2024 11:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருநாள் நபிகள் நாயகத்திற்கும், மெதீனாவாசிகளுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. இதை தொலைவில் இருந்து கவனித்த மெக்காவாசி ஒருவர் குரைஷிகளிடம் இது பற்றி தெரிவித்தார். இதைக் கேட்டதும் அவர்கள் மேலும் மெக்காவில் இருந்த முஸ்லிம்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர். இதனால் நாயகம் முஸ்லிம்களை மெதீனாவுக்கு செல்லும்படி கட்டளையிட்டார். அவர்களும் புறப்படத் தயாராகவே குரைஷிகள் தடுத்தனர். பின் இருவர், மூவர் என தனித்தனியாக ஒரு வாரத்திற்குள் நுாறு குடும்பங்கள் வரை மெதீனாவை அடைந்தன. இதனால் மெக்காவில் பல வீடுகள் காலியாகின. வியாபாரமும் குறைந்தது.