ADDED : பிப் 23, 2024 11:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மெக்காவாசியான அபூஜஹிலின் என்பவரின் சித்தப்பா இப்னு முகைறா மரணத் தருவாயில் விம்மி விம்மி அழுதார். குரைஷி இனத்தின் தலைவர்கள் பலரும் அங்கு கூடியிருந்தனர்.
தன் சித்தப்பா அழுவதைக் கண்ட அபூஜஹில், ''மரணத்தைக் கண்டு ஏன் இப்படி பயப்படுகிறீர்கள்'' எனக் கேட்டார்.
''மகனே. மரணத்தைக் கண்டு நான் அழவில்லை முஹம்மதின் மதமானது எங்கும் பரவி மெக்காவானது அவர் வசமாகி விடக் கூடாதே என்றுதான் அழுகிறேன்'' என்றார். அப்போது அருகே இருந்த அபூஸூப்யான் என்பவர், ''நீர் பயப்படவேண்டாம். நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். அதற்கு நானே பொறுப்பானவன்'' என்றார்.
இப்படி குரைஷி இனத்தவரால் மெக்காவில் துன்பத்தை சந்தித்த முஸ்லிம்கள் மெதீனாவுக்குக் குடிபெயர்ந்தாலும் பகைவரே இல்லை எனக் கூற முடியாது. நபிகள் நாயகத்தின் மீது குரைஷிகள் பகை கொண்டிருந்தனர்.