நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குரைஷிகளின் படைகளும், நபிகள் நாயகத்தின் படைகளும் எதிரெதிராக அணிவகுத்து நின்றன. குரைஷிப்படை வலுவான ஆயுதங்களுடன் அதிக எண்ணிக்கையில் வீரர்களை கொண்டிருந்தது. 'உத்பா' என்பவர் தலைமை தாங்கினார்.
ஆனால் நாயகத்தின் படையில் வீரர்கள் குறைவாக இருந்ததால் 'ஸதுப்னு முஆது' என்பவர் வாளுடன் பாதுகாப்பு அளித்தார்.
இந்நிலையில், 'இறைவா... மனம் நொந்தவர்களுக்கு உதவி செய்' என வேண்டினார் நாயகம். தோழரான அபூபக்கர், ''நீங்கள் வேண்டுவது நிச்சயம் நடக்கும்'' என்றார். அப்போது, 'அபூபக்கரே! எதிரிகள் தோற்கடிக்கப்பட்டு ஓடுவார்கள்' என உற்சாகப்படுத்தினார். படையினர் ஆர்வத்துடன் கிளம்பினர்.