
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நண்பரான அப்துலிடம் தன் மனைவியைப் பற்றி குறை சொல்லத் தொடங்கினார் கோபக்காரரான மாலிக். அவர் பேசி முடித்த பின்னர் அப்துல் தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.
'என் மனைவி என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறாள். குடும்ப பொறுப்பை கவனிக்கிறாள். குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்கிறாள். மொத்தத்தில் என்னை நரகத்தில் இருந்து காப்பாற்றுபவளாக இருக்கிறாள். நீ பாதி... நான் பாதி என வாழ்வதால் அவளது குறைகள் எனக்கு பெரிதாக தெரியவில்லை' என்றார்.
இதைக் கேட்ட மாலிக் கண்ணீருடன், 'என் மனைவியை புரிந்து கொள்ளவில்லையே. குடும்ப கஷ்டத்தோடு கோபப்படும் என்னையும் சகித்திருக்கிறாளே' என சொல்லி புறப்பட்டார்.