நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருநாள் சஹாபாப் மக்களிடம் நபிகள் நாயகம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர், ''ஜிப்ரீல் (அலை) வானவர் எனக்கு ஒரு மருந்து பற்றி கூறினார். அதை பயன்படுத்தினால் உடல்நலம் சரியாகும்'' என்றார்.
இதைக் கேட்ட அபூபக்கர், உமர், உதுமான், அலீ ஆகிய நால்வரும் அதை தங்களுக்கும் தெரிவிக்க வேண்டினர். மருந்தை எப்படி செய்வது என சொல்ல ஆரம்பித்தார்.
'எதிலும் படாத சுத்தமான மழை நீரில் பாத்திஹா, இக்லாஸ், பலக், நாஸ் ஆகிய நான்கு சூராக்களையும் எழுபது எழுபது முறை ஓதி, பின்பு ஆயத்துல் குர்ஸீயையும் எழுபது தடவை ஓதி அதில் ஊதி வைத்துக் கொள்ள வேண்டும்.
இதை நோயாளிகள் காலையும் மாலையும் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்தால் நோய்கள் குணமாகும்' என்றார்.