
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகம் மெக்காவில் இருந்த போது தோழர் ஒருவரை சந்திக்க சென்றார். செல்வந்தரான அவரே வீட்டின் வாசலுக்கு வந்து வரவேற்றார். வீட்டை சுற்றி பார்த்தார்.
''ஏற்கனவே வந்திருக்கிறீர்களே... இப்போது புதிதாக பார்க்கிறீர்களே... ஏன்'' எனக் கேட்டார் தோழர்.
''இங்கு திருமணம் நடந்தது போல நறுமணம் கமழ்கிறதே'' என்றார்.
சிரித்தபடியே, ''ஆம். நேற்று எனக்கு திருமணம் நடந்தது'' என்றார்.
''செல்வந்தரான நீங்கள் ஊரே பேசும்படி ஆடம்பரமாக திருமணம் நடத்தி இருக்கலாமே... ஏன் எளிமையாக நடத்தினீர்கள்'' எனக் கேட்டார் நாயகம்.
''திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினால் பணம் வீணாகும். அதனால் குடும்பத்தினரின் முன்னிலையில் எளிமையாக நடத்தி விட்டு மீதிப் பணத்தில் தர்மம் செய்தேன்'' என்றார்.
''தோழரே... உங்களைப் போல நல்ல மனம் உள்ளவருக்கு இறைவனின் கருணை கிடைக்கும்'' என்றார்.