ADDED : ஜூன் 21, 2024 01:45 PM
சொர்க்கத்தில் நெருங்க கூடாத மரத்தின் அருகே அழுதபடி நின்றான் இப்லீஸ். அவன், ஆதிமனிதனான ஹஜ்ரத் ஆதமிடம், ''இந்த மரத்தின் பழங்களை நீங்கள் சாப்பிட்டால் நிரந்தரமாக இங்கேயே வாழலாம். ஆனால் இறைவன் இதை விரும்பவில்லை.
மரணத்தின் வேதனையை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதே அவனது நோக்கம்'' என பொய் சொன்னான். இதைக் கேட்ட ஹஜ்ரத் ஆதம் அமைதியாக நின்றார்.
அருகில் இருந்த ஹஜ்ரத் ஹவ்வாவிடம், ''உங்கள் கணவர்தான் என் பேச்சைக் கேட்கவில்லை. நீங்களாவது எடுத்துச் சொல்லுங்கள்'' எனக் கெஞ்சினான்.
உடனே ஹஜ்ரத் ஹவ்வா பழங்களை பறித்ததோடு தான் சாப்பிட்டதோடு கணவருக்கும் கொடுத்தாள். அப்போது அவள், ''இப்பழத்தை சாப்பிடுவது குற்றமாகாது. அப்படியானாலும் இறைவன் மன்னிப்பான்'' எனத் தைரியமூட்டினாள். வேறு வழியின்றி ஹஜ்ரத் ஆதம் சாப்பிட்டார். இதன் விளைவாக இருவரும் தண்டனை பெற்றனர்.