ADDED : ஜூன் 27, 2024 12:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நபிகள் நாயகம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பனுாஸலமா வம்சத்தைச் சேர்ந்த ஒருவர், ''என் பெற்றோர் இறந்து விட்டனர். அவர்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமை ஏதும் எஞ்சியுள்ளதா'' எனக் கேட்டார்.
அதற்கு, ''ஆம். அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சி பாவமன்னிப்பு கோருங்கள். அவர்கள் விட்டுச் சென்ற (அனுமதிக்கப்பட்ட) மரண சாசனத்தை நிறைவேற்றுங்கள். தாய், தந்தையரின் உறவினர்களிடம் உறவாடுங்கள். அவர்களுடைய நண்பர்களை கண்ணியமாக உபசரியுங்கள்'' என்றார்.