
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகான உடை, அதன் மீது வாசனை திரவியத்துடன் வலம் வருபவர் இமாம் அபூஹனிபா. மற்றவர்களும் தன்னைப் போல் இருக்க வேண்டும் என அறிவுறுத்துவார். ஒருநாள் தன் அவையில் கிழிந்த ஆடையை அணிந்த ஒருவரைக் கண்டார். அவரை தனியாக அழைத்து ஆயிரம் திர்ஹம்(பணம்) கொடுத்தார் இமாம். வாங்க மறுத்தததோடு ''நான் செல்வந்தன். எனக்கு பணம் தேவையில்லை'' என்றார்.
கோபப்பட்ட இமாம், ''நாம் வளமுடன் வாழ்வதற்காக இறைவன் உலகை படைத்திருக்கிறான்'' என்ற வசனம் உன்னை எட்டவில்லையா? உன் நிலையை மாற்றிக் கொள். அப்போது அனைவரும் உன்னை அணுகுவர். நீ சொல்லும் விஷயங்களைக் கேட்க அவர்களின் இதய வாசல் திறக்கும்'' என்றார்.