ADDED : ஜூலை 04, 2024 08:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்தான் அப்துல். அப்போது குழந்தை ஒன்று சாலையைக் கடக்க முயன்றதைப் பார்த்தான்.
தன்னை தண்டனைக்கு ஆளாக்கியவரின் குழந்தை என்பது நினைவுக்கு வந்தது. அந்த நேரத்தில் கார் ஒன்று குழந்தை மீது மோதும் விதத்தில் நெருங்கியது. அதை காப்பாற்ற அப்துல் ஓடினான். ஆனால் குழந்தையின் தாயோ, 'பாவிப்பய... என் குழந்தையைக் கொல்ல வர்றான்' எனக் கத்தினாள். அவனோ குழந்தையை கொடுத்து விட்டு, ''எனக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது உன் கணவன். அதற்கு இந்தக் குழந்தை என்ன செய்யும். செய்த தவறை திருத்திக் கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு'' என்றான்.