
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனக்கு ஏதாவது உதவி செய்யுமாறு ஒருவர் கேட்க,''உங்களிடம் என்ன உள்ளது?'' எனக் கேட்டார் நபிகள் நாயகம்.
''கிண்ணம், போர்வை உள்ளது'' என்றார்.
உடனே நாயகம் இரண்டையும் காட்டி, ''தோழர்களே... இவற்றை விலைக்கு வாங்க விரும்புகிறீரா'' எனக் கேட்டார். இரண்டு திர்ஹம் கொடுத்து வாங்கினார் ஒரு தோழர்.
பின்னர் உதவி கேட்டவரிடம், ''இதில் ஒரு திர்ஹமை உணவுக்காகவும். இன்னொரு திர்ஹமை செலவுக்காகவும் வைத்துக் கொள்ளுங்கள். காட்டில் விறகு சேகரித்து விற்று பிழையுங்கள்'' என்றார்.
ஒரு மாதத்திற்குப் பின் அந்த மனிதர், ''நாயகமே...தாங்கள் கூறியதை பின்பற்றினேன். இப்போது பதினைந்து திர்ஹம் சேமித்துள்ளேன். அதன் மூலம் சாப்பிட கோதுமையும், உடுத்த ஆடைகளும் வாங்கப் போவதாகத் தெரிவித்தார்'' உழைத்தால் உயரலாம்