ADDED : டிச 20, 2022 02:46 PM
நல்ல செயல்களை செய்வார். பிறருக்கு நற்பண்புகளை போதிப்பார். எளிமையாக பழகுவார் அந்த பெரியவர்.
ஆனால் அவர் சில சமயங்களில் கவனக்குறைவாகவும் நடந்து கொள்வார். ஆனால் அதனை அவர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
சொர்க்கம் செல்வோம் என நினைப்பில் சில நாளில் அவர் இறந்தும் போனார்.
ஆனால் சொர்க்கத்தின் வாசல் கதவுகள் மூடியிருந்தன. எப்போது திறக்கும் என காவலாளியிடம் கேட்டார். அதற்கு அவரோ வாரம் ஒரு முறை மட்டுமே திறக்கும் கதவு. இன்று இதுவரை திறக்கவில்லை. எப்போது திறக்கும் என தெரியவும் இல்லை என்றார் அவர். இன்னும் கதவு தான் திறக்க வில்லையே என நினைத்த அவர் சற்று நேரம் கண் அயர்ந்தார். அச்சமயத்தில் கதவு திறந்து
மூடும் ஒசை கேட்கவே விழித்துப் பார்த்தார். அவர் உள்ளே செல்வதற்குள் கதவு மூடிக்கொண்டது. விழிப்பாக இல்லாததால் இன்னும் ஒருவாரம் காத்திருக்க வேண்டுமே என்ற நினைப்பு அவருள் திடமாக ஓடியது.

