
பணக்காரர் ஒருவர் யாருக்கும், தெரியாமல் தர்மம் செய்ய நினைத்தார். அதன்படி ஒருநாள் இரவு பொற்காசு நிறைந்த பை ஒன்றை எதிரே வந்தவரிடம் கொடுத்து விட்டுச் சென்றார். காலையில் ஊரார்கள் திருடனுக்கு கிடைத்த யோகத்தை பார்த்தீர்களா என பேசிக் கொண்டனர். தான் செய்த தர்மம் வீணாகி விட்டதே என நினைத்தார். மறுநாள் இரவு அதே போல் எதிரே வந்த பெண்மணியிடம் பொற்காசு பையை கொடுத்து விட்டு நகர்ந்தார். விடியற்காலையில் ஊரார்கள் ஒழுங்கீனமற்றவளுக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா என்றனர். வருந்திய பணக்காரர் மீண்டும் அதேபோல் மறுநாள் மற்றொருவரிடம் பொற்காசு பைகளை கொடுத்து விட்டு சென்றார்.
மறுநாள் ஊரார்கள் செல்வந்தருக்கு கிடைத்த வாய்ப்பை பார்த்தீர்களா பணம் இருக்கும் இடத்தில் தான் அது போய் சேரும் என்றனர். அன்று தான் செய்த தர்மம் அனைத்தும் பயனற்று போய்விட்டதே என வருத்தத்துடன் படுத்திருந்தார் பணக்காரர். ''திருடன் திருந்தினான். பெண்ணோ ஒழுக்கத்துடன் வாழ ஆரம்பித்து விட்டாள். செல்வந்தரோ கொடையாளியாக மாறி விட்டார். நீ செய்த தர்மம் வீணாகவில்லை'' என அவருக்கு மட்டும் அசரீரி கேட்ட திசை பார்த்து வணங்கினார்.

