
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருஞ்செல்வந்தர் அவர். சிறந்த வியாபாரியும் கூட... உதவி செய்யும் மனம் படைத்தவர். அவருக்கு திடீர் என தொழிலில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. தன் மகனை அழைத்தார். நீ யாரிடமும் நமக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சொல்லக்கூடாது என்றார். ஏன் அப்படி சொல்லுகிறீர்கள் எனக்காரணம் கேட்டான் மகன்.
நம் நலத்தில் அக்கறையுள்ளவர்களுக்கு இது தெரிந்தால் வருத்தப்படுவார்கள். அதே நேரத்தில் எதிரிகளுக்கு தெரிந்தால் நம்மை ஏளனம் செய்வார்கள். கவர்ச்சி காட்டி அவர்கள் நமது தொழிலை பின்பற்றவும் வாய்ப்பு உள்ளது. அதனால் தான் அவ்வாறு சொன்னேன் என்றார் செல்வந்தர். அனைத்தையும் கேட்ட அவரது மகன் சூட்சுமத்தை புரிந்து கொண்டான்.

