ADDED : நவ 10, 2022 12:34 PM

அரண்மனைக்குள் நுழைந்த வழிப்போக்கனை காவலாளிகள் தடுத்தனர். அவர்களையும் மீறி உள்ளே செல்ல முயற்சித்தான்.
மீண்டும் தடுத்த அவர்களிடம் ''சத்திரத்திற்குள் செல்ல யாருடைய அனுமதியும் தேவையில்லை'' என அலட்சியமாக பதில் சொன்னான். அவனை மன்னர்முன் கொண்டு போய் நிறுத்தினர். அரண்மனையை சத்திரம் என குறைவாக கூறியுள்ளாய் உன்னை என்ன செய்கிறேன் பார் என ஆதங்கப் பட்டார் மன்னர்.
'ஆமாம்' எனச்சொன்ன அவன் அமைதியாக... அவரிடம் ''இதற்கு முன்பு இங்கு யார் யாரெல்லாம் வசித்தார்கள் சொல்ல முடியுமா'' எனக் கேட்டார்.
அதற்கு அவரும் ''அப்பா, அதற்குமுன் தாத்தா, அவருக்குமுன் பாட்டனார், அதற்கு முன்பு முப்பாட்டனார் என பதில் சொன்னார்.
மன்னரே! பாருங்கள் இங்கு எவரும் நிரந்தரமில்லை. ஒருவர் செல்லும் போது மற்றொருவர் இருப்பது சத்திரம் அல்லாமல் வேறு என்னவாக இருக்கும் என பதில் சொன்னான்.
மன்னரின் அகக்கண் திறந்தது. அரசை மகனிடம் ஒப்படைத்து விட்டு இறைவழியில் ஆட்சி செய் எனக்கூறியவர் காடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

