
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஞானி ஒருவரை விரக்தியான மனநிலையில் இருந்த தம்பதியர் சந்திக்க சென்றனர். தற்போது ''நாங்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து வசதியான வீட்டிற்கு குடிபுக தங்களின் ஆசி வேண்டும்'' என கேட்டார்கள். யார் யார் இருக்கிறீர்கள் என ஞானி கேட்க, மகன், மகள், ஆடு, குட்டிகளுடன் இருப்பதாக சொன்னார்கள். அதற்கு வீட்டின் உள்ளேயே ஆட்டுக்குட்டிகளை கட்டும் படியும், அடுத்த வாரம் தன்னை சந்திக்கும்படியும் சொன்னார்.
ஒருவாரம் சென்றது. தற்போது மிகவும் சிரமப்படுகிறோம் என தெரிவித்தார்கள். மீண்டும் அதனை தொழுவத்திலேயே கட்டி விடுங்கள். அடுத்த வாரம் சந்திப்போம் என்றார் ஞானி. அதன்படியே சந்தித்த அவர்கள் தற்போது வசிக்கும் வீடே வசதியாக உள்ளது என்றனர். பார்த்தீர்களா ''போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து'' என சும்மாவா சொல்லி வைத்தனர் பெரியோர்.

