
முல்லா வசிக்கும் ஊரில் அறிஞர் ஒருவர் இருந்தார். முல்லாவை விட அறிவில் சிறந்தவர் என்ற தலைக்கனம் அவருக்கு இருந்தது. இதை தெரிந்து கொண்ட முல்லா அவரை சந்தர்ப்பம் பார்த்து திருத்த நினைத்தார்.
ஒருநாள் விலங்குகளில் எது(கழுதை, பன்றி) இழிவான பிறவி என்பது பற்றிய விவாதம் இருவருக்கும் இடையே நடந்தது. தீர்வு ஏற்படாத நிலையில் மற்றொரு நாள் நடத்துவது என முடிவு செய்தனர். ஆனால் அன்றைய தினம் முல்லா தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். விவாதத்திற்கு முல்லா வராததால் அவர் வீட்டின் கதவில் முட்டாள் கழுதை என எழுதி விட்டு வந்தார் அறிஞர்.
வெளியூரில் இருந்து சரியான நேரத்திற்கு வந்த முல்லா கதவில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை படித்தும் அமைதியாக விவாதத்தில் கலந்து கொண்டார். அறிஞரோ! உங்கள் வீட்டில் நான் எழுதிய வாசகத்தை படித்து தான் வந்தீர்களா எனக் கேட்டார். அதற்கு முல்லா! ஞாபகப்படுத்தியது சரி தான் அதற்காக உங்கள் பெயரையுமா சேர்த்து எழுதி வைக்க வேண்டும் எனச் சொன்னார். முல்லாவின் பேச்சைக்கேட்ட அறிஞரின் தலைக்கனம் காணாமல் போனது.

