
அப்பா மகன் இருவரும் நண்பர் வீட்டிற்கு விருந்தினராக சென்றனர். அவர்களுக்கு முதலில் தேனீர் வழங்கப்பட்டது.
கண் இமைக்கும் நேரத்தில் தேனீர் கோப்பை உடையும் சத்தம் கேட்க... நண்பரிடம் ''நான் தான் உடைத்தேன்'' என்றார் அப்பா. நண்பரோ விருந்திற்கு வந்தவர்களால் தொல்லை தான்; அது சீன கோப்பை என மனதிற்குள் வருந்தினார்.
மகனோ ''கோப்பையை தொடாத தாங்கள் ஏன் அவரின் மகன் செய்த தவறை முன்வந்து ஒப்புக் கொண்டீர்கள்'' எனக் கேட்டான். அதற்கு அவரோ ''இங்கு நடந்ததற்கு நீயே சாட்சி. அதனால் எங்களின் நாற்பது வருஷ பழக்கம் முறியும். அவரது மகன் என்னை பார்க்கும் போதெல்லாம் வெறுப்பான். அந்த நிலை வேண்டாம் என்று தான் அவ்வாறு சொன்னேன்'' என்றார். இருவரும் பேசிக்கொண்டிருந்ததை வீட்டில் இருந்த 'சிசிடிவி' மூலம் பார்த்த நண்பர் ஒடி வந்து அவர்கள் கையை பிடித்து கொண்டு பெருமிதம் கொண்டார்.

